Breaking

13 January 2025

நியூசிலாந்து சுற்றுப் பயணத்தை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பிய இலங்கை அணி-கவலையில் ஜயசூரிய!

இலங்கை அணி இன்று 13 செய்து சுற்றுப் பயணத்தை நிறைவு செய்து கொன்று இன்று காலை காலை தாயகம் திரும்பியது.


இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் சனத் ஜயசூரிய, போட்டித் தொடரில் தோல்வியடைந்தமை குறித்து தாம் வருந்துவதாக தெரிவித்தார்.


மேலும், போட்டித்தொடரின் போது இடம்பெற்ற தவறுகள் எதிர்காலத்தில் மீண்டும் நிகழக்கூடாது என்றும், தவறுகளை சரிசெய்து எதிர்கால போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்றும் சனத் ஜயசூரிய தெரிவித்தார்.


“ரி20 தொடரை இழந்தது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. ஒரு போட்டியை மட்டுமல்ல, இரண்டு போட்டிகளையும் நாங்கள் எளிதாக வென்றிருக்கலாம். போட்டிகளில் தோல்வியடைந்ததில் அணியும் மிகவும் வருத்ததுடன் உள்ளது என நான் நினைக்கிறேன்.


ஒருநாள் தொடரில், கடந்த போட்டியில் நாங்கள் மிகச் சிறப்பாக விளையாடினோம். முதல் இரண்டு போட்டிகளில், எமது துடுப்பாட்ட வீரர்கள் முதல் 10 ஓவர்கள் வரை சிறப்பாக பிரகாசிக்க வில்லை. 4 அல்லது 5 விக்கெட்டுகள் விழும்போது அது கடினம்.


மூன்றாவது போட்டியில், அவர்கள் தங்கள் தவறுகளை சரிசெய்து போட்டியிட்டனர். இந்தத் தவறுகள் தொடர அனுமதிக்க முடியாது. நீங்கள் அதை முடிந்தவரை குறைத்து, நாட்டை விட்டு வெளியே செல்லும் அதை சரிசெய்ய வேண்டும்.


பெத்துமின் காலில் ஏற்பட்ட காயம் குறித்து பார்க்க வேண்டியுள்ளது. அவுஸ்திரேலியாவுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகள் இந்த மாத இறுதியில் ஆரம்பமாக உள்ளன. உள்ள வீரர்கள் பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும்.” என்றார்.  

No comments:

Post a Comment