கடந்த (11) திகதி கண்டி தவுலகலவில் பாடசாலை மாணவி ஒருவரை இனம் தெரியாத நபர்களால் கடத்தி செல்லப்பட்ட மாணவியை மீட்க முயன்ற 25 வயது முகமது இஸ்ஸதீன் அர்ஷத் அகமதுவின் துணிச்சலை இலங்கை காவல்துறை பாராட்டி உள்ளது.
மேலும் சந்தேக நபர்களை தேடும் பணியில் பொலி சார் மும்முரமாக செயல்பட்ட நிலையில் இன்று (13) காலை கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு பேருந்தில் இருந்த போது, கடத்திச் சென்ற நபரையும், குறித்த மாணவியையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நேற்றிரவு (12) அம்பாறை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இருவரும் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவியிடம் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றார்.
ADA DERANA
No comments:
Post a Comment