Breaking

14 January 2025

அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களது ஜனாஸா நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்


புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபரும், புத்தளம் மாவட்ட முன்னாள் ஜம்இயத்துல் உலமா சபை தலைவருமான அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்கள் கடந்த சில தினங்களாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி (13) திங்கள்கிழமை நேற்று காலமானார் காலமானார்.


அன்னார் புத்தளம் நகரில் கல்விக்கு ஒளி வீசிய நாடறிந்த உலமா மஹ்மூத் ஹஸரத் அவர்களின் புதல்வராவார்.


மர்ஹூம் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களுக்கு காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினரால் அவரது சேவையைப் பாராட்டி அண்மையில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 


மேலும் கொழும்பு தனியார் மருத்துவமனையில் நேற்று (13) மாலை காலமான புத்தளம், மத்ரஸதுல் காசிமிய்யா முன்னாள் அதிபர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களது ஜனாஸா பொதுமக்கள் பார்வைக்காக கொழும்பு குப்பியாவத்தை பள்ளிவாசலில் நேற்று இரவு 9.00 - 10.00 மணிவரை வைக்கப்பட்டது. 


பின்னர் ஜனாசா புத்தளத்தில் அன்னாரது வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு, இன்று (14) பகல் 2.00 - 3.30 வரை மத்ரஸதுல் காசிமிய்யாவில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு, மஸ்ஜிதில் பகாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அஸர் தொழுகையைத் தொடர்ந்து நல்லடக்கம் செய்யப்படும்.


#copy 


No comments:

Post a Comment