Breaking

03 January 2025

குழந்தையில்லாதவர்க‌ள் இந்த பழத்தை ஒரே ஒரு முறை சாப்பிட்டு பாருங்கள்.

குழந்தையில்லாதவர்க‌ள் ஒருமுறை மருத்துவமனையை ஒதுக்கிவிட்டு ஒரு முறை இதனை  சாப்பிட்டு பாருங்கள்..! 


இந்த பழத்தின் பெயர் நம்ம ஊரு கிவி பழம், கள்ளி பழம் மற்றும் சப்பாத்திகள்ளிபழம் என்றும் அழைப்பார்கள் இதனை ஆங்கிலத்தில் (Barbary fig) என கூறப்படுகிறது. இந்த பழம் 

நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த பழத்தை அதிகமானவர்கள்  சாப்பிடுவது இல்லை.


ஏனென்றால் இதில் உள்ள முற்கல் யாரையும் நெருங்க விடாது. நாம் எப்படி அழகு ரோஜாவை எடுக்கும் போது முள் குத்துமோ, அதுபோல் இதில் நூறு மடங்கு முள் அதிகம் இருக்கும். அதனால் துரட்டிக் கொண்டு இந்த பழத்தை பறிக்கவும்.


இந்த கள்ளி பழத்தை பறித்ததும், அப்படியே சாப்பிடமுடியாது. அந்த பழத்தின் மேல் கண்ணுக்கு தெரியாத பூ முற்கல் ஆயிரக்கணக்கில் இருக்கும். அதனால் துணியில் எடுத்து அந்த பழத்தை தரையில் உள்ள கல்லில் தேய்த்து மேலே உள்ள முற்கலை போக்கி 


கவனமாக பழத்தை பிரித்தால் உள்ளே, நட்சத்திர வடிவில் தொண்டை முள் இருக்கும்.


அப்படியே சாப்பிட்டால் தொண்டையில் அந்த முற்கல் சிக்கி அதிக சிரமத்தை தரும். அந்த சிறு முற்கல் எடுத்து வெளியே போட்டு விடவும். பின் மெதுவாக உள்ளே உள்ள பழத்தை சாப்பிட அதிக விதையும், நல்ல இனிப்பு சுவையும், நல்ல சிவப்பு நிறமும் கலந்து இருக்கும் இதை சாப்பிடவும்.


இதனால் இதயம் சீராக துடிக்கும். இரத்த விருத்தி உண்டாகும் ஆணுக்கு அனுக்கள் அதிகரிக்கும்.

பெண்களுக்கு கரு முட்டை நன்றாக வளரும். கருவுற்ற பெண்கள் இந்த கள்ளி பழம் சாப்பிட்டால் குழந்தை நல்ல சிவப்பு நிறத்துடனும், நல்ல கோபம், ரோசத்துடனும் இருக்கும்.


இந்த கள்ளி பழம் குங்குமப் பூவை விட மிகச் சிறந்தது.


இந்த கள்ளி பழம்  அதிகமாக காட்டுப்பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் ஆடு, மாடு மேய்பவர்கள் தான் அதிகம் சாப்பிடுவார்கள், மற்றவர்களுக்கு இ‌ந்த பழத்தை சாப்பிடுவது மிகவும் அரிது.


இந்த பழம் சாப்பிடுபவர்கள் ஆண்மை அதிகரிக்கும். கருப்பை சுத்தம் ஆகும். வாரத்தில் மூன்று முறை இதனை எடுத்துக் கொண்டால் நீர்கட்டி தானாக அழியும். இதனை எடுக்கும்போது பெண்கள் இனிப்பு பதார்த்தங்களை சாப்பிடக்கூடாது. நன்றாக நடைப்பயிற்சி செய்ய  முக்கியம். எல்லோருக்கும் நல்லது செய்யும் பழம் இது.


இந்த கள்ளி பழம்பழத்தை வாழ்கையில் ஒரு முறையாவது சுவைத்து பாருங்கள். எல்லாம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை.


குறிப்பு :

இந்த பழத்தை குளிர்சாதன பெட்டியில் வைத்து சாப்பிடக்கூடாது.


No comments:

Post a Comment