Breaking

01 January 2025

புகைப்பிடித்தலை விட்டுவிட முடியும், ஆனால் அதற்கு தேவை உதவி!


புகைப்பிடிப்பதை எப்படியாவது விட்டுத் தொலைய வேண்டும் என புகைப்பிடிப்பவர்கள் பலர் நினைக்கிறார்கள் ஆனால் அது அவர்களால் செய்யக்கூடிய இலகுவான காரியம் அல்ல என்பது அவர்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது.


பலருக்கு  புகைப்பிடித்தல் ஒரு கெட்ட விடயம் அதனால் பல சுகாதாரப்பாதிப்புகள் தனக்கும் , தன்னை அண்டி உள்ளவர்களுக்கும்  ஏற்படுகின்றன எனத் தெரிந்திருந்தும் அதிலிருந்து விடுபட்டு கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். 


சிறு வயதில் நண்பர்களோடு சேர்ந்து ஆபத்து புரியாமல் பழகிய ஒரு பழக்கம் இன்று தன்னை அடிமைப்படுத்தி அசிங்கப்படுத்துவதை எண்ணி பலர் வருந்துகிறார்கள் ஆனால் அதிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கிறார்கள்.


அழகிய பக்குவமான குடும்பத்தில் தான் மட்டும் புகைத்தலில் வீழ்ந்து வெளியேற முடியாமல் சங்கடப்படுபவர்கள் பலர்.

தன் தாய் தந்தையின் கண்ணீருக்கு காரணமான புகைத்தலை எப்படியாவது விட்டுத்தொலைய விரும்பியும் விட்டுவிட முடியாத குற்ற உணர்வுடன் பலர் அவதிப்படுகிறார்கள்.


வைத்தியர்களிடம் சென்றால் தீர்வு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை சில வைத்தியர்கள் ஏசியும் விடுகிறார்கள் .  சில வைத்தியர்கள் புகைத்தல் இவரின் மிகப்பெரிய பிரச்சினை அதற்கு சிறந்த ஒரு தீர்வு கொடுக்கவேண்டும் என்ற நிலையே இல்லாமல் கணக்கிலெடுக்கிறார்களே இல்லை .


சில வைத்தியர்களுக்கு  அதுபற்றிய போதுமான அறிவு இல்லை 

போன்ற பல குறைபாடுகளை பாதிக்கப்படுபபவர்கள் முறைப்படுகிறார்கள் அப்படி எனில் தீர்வுதான் என்ன?

புகைத்தலை விட விரும்பியும் விட முடியாமல் தவிப்பவர்கள் மீது அக்கறை கொள்ளவேண்டியது  அவர்களுக்கான பொறுத்தமான சிகிச்சைகளை வழங்கவேண்டியது கட்டாயக்கடமையாகும், அவ்வாறனவர்களுக்காக நேரத்தை ஒதுக்கவேண்டியது வைத்தியர்களின் கட்மையாகும்.


புகைத்தலை விட நினைத்தும் , அதற்காக முயற்சி செய்தும் விட்டுவிட முடியாதவர்கள் மீது பழி சுமத்துவதை முதலில் நிறுத்திக்கொள்ள வேண்டும் அது அவரின் குடும்ப உறுப்பினராயினும் ,வைத்தியராயினும் கூட. அது புகைப்பவர்களின்  பிழையல்ல ! 


ஒரு சிகரெட்டில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஆயிரக்கணக்கான நச்சுப் பொருட்கள் உள்ளன. அதில் உள்ள நிகொட்டின் எனப்படும் நச்சுப்பதார்த்தம் மூளைக்குள் ஊடுருவி மூளையை கட்டுப்படுத்த தொடங்குகிறது. நிகொட்டின் உடலில் குறைவடைந்தால் உடனடியாக மூளை நிகொட்டினை கேட்கும் உடனே அவர் சிகெரெட்டை புகைத்து நிகொட்டினை உடலில் செலுத்தாவிட்டால் உடலை பாடாய்படுத்திவிடும்.

சிகரெட் குடித்துக்கொண்டிருக்கும் ஒருவர் அதனை நிறுத்தும் போது 

சிகரெட் குடித்தேஆகுவேண்டும் என்ற அவதி,அதிகமாக பசித்தல் ,மனதை ஒரு நிலைப்படுத்த முடியாமை , எரிச்சல் ,மன அழுத்தம் , அமைதியற்ற நிலை , ஆக்ரோசமடைதல் , இராத் தூக்கம் குழைதல்  போன்ற பல சிக்கல்கள் ஏற்படுகிறது .


எனவேதான் தனிப்பட்ட ஒருவரால் அவ்வளவு இலகுவாக சிகரெட்டை விட்டுவிட முடிவதில்லை , அதற்காக  சிகரெட் பிடிக்கும் ஒருவரை குறைகூறுவதை விட்டு அவருக்கு அதற்கான உதவிகளை பெற்றுக்கொடுக்கவேண்டும்.


பொறுத்தமான சில சிகிச்சை முறைகள் மூலம் சிகரெட்டை முற்றிலும் விட்டுவிலகிவிட முடியும் .  சிகிச்சை முறைகள் சில  சிறப்பாக வெற்றியளிப்பதை ஆய்வுகள் நிருபிக்கின்றன .

சிகிச்சை முறைகள் எனும் போது 

1- உள நல ஆலோசனைகள் 

2- குறிப்பிட்ட சில செயன்முறைகள்

3- சில மருந்துவகைகள் 

4- தொடர்ச்சியான வைத்திய பின்தொடர்கை (follow up)

இவ்வாறான  அனைத்தும் ஒரே நேரத்தில் வழங்கப்பட்டு சிகெரெட்டை விடுவதனால் ஏற்படும் சில அசௌகரியங்களுக்கான தீர்வுகளும் வழங்கப்படும் போது இவ் ஆபத்தான புகைத்தலை விட்டும் ஒருவர் தூரமாக முடியும் என்பது இயலாக்காரியமல்ல அத்ற்கான பொருத்தமான வைத்தியரை தேடிப்பிடித்தலும் , விட்டே தீரவேண்டும் என்ற அவாவும் , குடும்பத்தின் ஊக்குவிப்பும் அதனை இலகுவில் செய்துவிடும்.


Dr. MB Halith. MBBS (SL) , DCH (Col) 






No comments:

Post a Comment