Breaking

13 January 2025

2024 உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போட்டை கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியானது. இலங்கைக்கு முன்னேற்றம்.!

உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு PASSPORT கொண்ட நாடுகளின் பட்டியலை ஹென்லே பாஸ்போர்ட் இண்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.


ஒரு நாட்டின் குடிமக்கள் வைத்திருக்கும் கடவுச்சீட்டின் மூலம் எத்தனை சர்வதேச நாடுகளுக்கு விசா இன்றி பயணம் மேற்கொள்ள முடியும் என்பதை வைத்து கடவுச்சீட்டுகளின் மதிப்பு கணக்கிடப்படுகிறது. இது சாதாரண குடிமக்கள் சர்வேதேச அளவில் பயணம் செய்வதை எளிதாக்குகிறது.


இந்நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த ஹென்லே பாஸ்போர்ட் இண்டெக்ஸ் எனும் நிறுவனம் தற்போது 2025ஆம் ஆண்டில் உலக நாடுகளின் கடவுச்சீட்டுக்களின் மதிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது.


இதில், முதல் இடத்தில் தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரின்  கடவுச்சீட்டு பிடித்துள்ளது. அந்த கடவுச்சீட்டை கொண்டு சுமார் 195 உலக நாடுகளுக்கு விசா இல்லாமல் சிங்கப்பூரின் குடிமக்களால் பயணம் செய்யக்கூடிய சிறப்பை அது பெற்றுள்ளது.


அதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் 193 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்யும் அளவிற்கு ஜப்பான் நாட்டு கடவுச்சீட்டின் மதிப்பு உயர்ந்துள்ளது.


அந்த பட்டியலின் படி முதல் 10 இடங்களில் அடுத்தடுத்து பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளே இடம்பிடித்துள்ளன.


இம்முறை இலங்கை  44 நாடுகளுக்கே விசா இன்றி பயணம் செய்யும் நிலையில் 96 ஆவது இடத்தில் உள்ளது.மேலும் இலங்கை கடவுச்சீட்டு 2023 இல் 100 வது இடத்திலும் 2022 இல் 102 வது இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.


இலங்கையுடன் ஈரான் மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளும் சுட்டெண்ணில் 96வது இடத்தைப் பிடித்துள்ளது.


இந்த வரிசையில் வெறும் 26 நாடுகளுக்கு மட்டுமே விசா இன்றி பயணம் செய்யும் அளவிற்கு அந்த பட்டியலின் கடைசி இடத்தை ஆப்கானிஸ்தான் நாட்டின் கடவுச்சீட்டு பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்த வரிசையில் முதல் 10 இடங்களை பிடித்த நாடுகள் விசா இல்லாமல் பயணம் மேற் கொள்ள முடியுமா நாடுகளில் எண்ணிக்கை.


1.சிங்கப்பூர்: 195 இடங்கள்

2.ஜப்பான்: 193 இடங்கள்

3.பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், பின்லாந்து, தென் கொரியா: 192 இடங்கள்

4.ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே: 191 இடங்கள்

5.பெல்ஜியம், நியூசிலாந்து, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து, யுனைடெட் கிங்டம்: 190 இடங்கள்

6.கிரீஸ், ஆஸ்திரேலியா: 189 இடங்கள்

7.கனடா, போலந்து, மால்டா: 188 இடங்கள்

8.ஹங்கேரி, செக்கியா: 187 இடங்கள்

9.எஸ்டோனியா,அமெரிகா : 186 இடங்கள்

10.லிதுவேனியா, லாட்வியா, ஸ்லோவேனியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: 185 இடங்கள்.


இதன் படி சிங்கப்பூர் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் 195 நாடுகளுக்கு விசா இல்லமால் பயணம் செய்யு முடியும். 





No comments:

Post a Comment